ஊறணிப் பதியிலுறை காளியென்றாயே...
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்
பெரிய ஊறணி, மட்டக்களப்பு

ஆலய அபிவிருத்தித் திருப்பணிகள்
Temple Development Projects​​

ஆலயம் தோற்றம் பெற்ற காலம் முதல் படிப்படியான அபிவிருத்தி திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. ஆலயத்தின் அறங்காவலர்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்திப் பணிகள் அருங்கொடையாளர்களாலும் ஆலய வளர்ச்சியன்பால் கொண்ட அதீத அக்கறையாலும் பலதரப்பட்ட அன்பர்களின் பொருளுதவி, நிதியுதவி, மற்றும் சரீர உதவிகளினால் ஆலயத்தின் உட்கட்டுமானம் படிப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது.

அம்பாள் ஆலயத்தின் 5ம் மண்டப கட்டுமானப் பணிகளின் முதற் கட்டம் பூர்த்தியடைந்துள்ளது. அம்மண்டபத்தின் மேலதிக அபிவிருத்திப் பணிகளுக்காக நன்கொடையளிக்க விரும்பின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்