அறிவித்தல்களும் பிரசுரங்களும்
Announcements / Publication

07.06.2022 – மகா சபைக் கூட்டம் – 2022

 மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிவுறுத்தல்களின் பிரகாரம் ஆலய யாப்பின் பிரமானங்களுக்கு அமைவாக ஆலய மகா சபைக் கூட்டம் மீளவும் எதிர்வரும் 12/06/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு பெரிய ஊறணி அறநெறிப் பாடசாலையில் நடைபெறும். இக்கூட்டத்திற்கு பெரிய ஊறணி பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

– ஆலய பரிபாலன சபை

23.05.2022 – ஆலயத்தின் மகா சபைக்கூட்டம் எதிர்வரும் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு பெரிய ஊறணி அறநெறிப் பாடசாலையில் இடம்பெறும். ஆகவே அக்கூட்டத்திற்கு பெரிய ஊறணி இந்துப் பொதுமக்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்கும்படி அழைக்கிறோம்.

 மேலும் கடந்த 22.05.2022 அன்று இடம்பெற்ற நிருவாக சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கையினை பொது மக்களின் பரிசீலனைக்காக அறிக்கையிடுகிறோம். இக் கணக்கறிக்கை குறித்த மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் 02.06.2022 இற்கு மேற்படாது ஆலய பரிபாலன சபையை எழுத்து மூலம் தொடர்பு கொள்ளுமாறு தங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

கணக்கறிக்கையின் மின்னூல் வடிவத்தை தரவிறக்கிக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

– ஆலய பரிபாலன சபை

29.03.2022 – சுபகிருது வருடப்பிறப்பு 2022 | வருடப்பிறப்புக் கருமங்களும் பூஜை ஒழுங்குகளும்

Click Here

12.07.2021 – அடியார்களுக்கு ஆலய நிருவாக சபை விடுக்கும்  அறிவுறுத்தல்:
அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் நாளை 13ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது

இந்த வருடம் COVID-19 தொற்று காரணமாக வருடாந்த உற்சவத்தினை மிகவும் எளிமையாக நடாத்துவதற்கு நிர்வாக சபை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நோய்த்தொற்று தொடர்பான புள்ளிவிபரங்கள் கவலை அளிக்கின்றதோடு குறிப்பாக எமது பகுதியிலும் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலைமையில் சாதாரணமாக வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கான அனுமதி நமக்கு கிடைக்கப் பெறவில்லை. மேலும் இந்த நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையை குறித்து எமது பகுதி மக்களின் மத்தியில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் ஒன்று கூடி வருடாந்த உற்சவத்தை செய்வதற்கு ஆலய நிர்வாக சபை இணக்கம் கொள்ளவில்லை.

ஆகவே நிர்வாக சபையானது சமூக அக்கறையுடன் பொறுப்புடனும் இந்த வருட உற்சவத்தினை மிகவும் எளிமையாக நடத்தும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த வருடாந்த உற்சவம் இடம் பெறும் காலங்களில் பூஜை வேளைகளில் அடியார்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பகல் வேளைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை ஆலயம் திறந்திருக்கும், பொதுமக்கள் உங்கள் வழிபாடுகளை ஐவைந்து பேராக வந்து நிறைவு செய்து கொள்ளுமாறு தயவாக வேண்டுகிறோம். ஆலயத்தின் பூஜை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பொதுமக்கள் பூஜைகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் உங்களை மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

இறுதிநாளான பள்ளயச்சடங்கு அன்று மாத்திரம் பொதுமக்களை இணைத்துக்கொண்டு பூஜை வழிபாடுகளை செய்வதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றோம். ஆகவே அன்றைய தினம் மட்டும் பூஜைகளின்போது பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும் ஆலய நிர்வாக சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தயவுசெய்து இந்த அறிவிப்பினை கவனத்தில் எடுத்து அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் எந்தவித தங்கு தடையும் இன்றி மிக எளிமையாக நடாத்துவதற்கு பொதுமக்கள் உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு உங்களை மிகப் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

– ஆலய பரிபாலன சபை

26.10.2020 – அடியார்களுக்கு ஆலய நிருவாக சபை விடுக்கும் கண்டிப்பான அறிவுறுத்தல்:
நாட்டில் நிலவும் கொரோணா நோய் அச்சுறுத்தலின் காரணமாக மட்டக்களப்பில் தீவிர நோய்ப்பரவலை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 26.10.2020 அன்று விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நமது ஆலயத்தில் பூசகர் உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். வாராந்த பூஜைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாத்திரம் நடைபெறும். அடியார்கள் தயவுசெய்து தங்கள் வீடுகளிலிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிருவாக சபை இத்தால் தங்களுக்கு அறியத்தருகிறது. நம்மையும் நமது சமூகத்தையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதனையும் சுகாதாரத் துறையினரின் அர்பபணிபபான சேவைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் ஆலய நிருவாக சபை இத்தால் வேண்டுகோள் விடுக்கிறது.

19.07.2020 – ஆலய பூசகர் பணி நீக்கம்

19.07.2020 அன்று இடம்பெற்ற விசேட நிருவாக சபைக் கூட்டத் தீர்மானங்களிற்கிணங்க ஆலய பூசகர் திரு. சந்திரகுமார் உமேஷ்காந்த் ஆலய பூசகர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்.

பெரிய ஊறணி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கும் அதன் நிருவாக சபைக்கும் திரு. சந்திரகுமார் உமேஷ்காந்த் அவர்களுக்கும் நிறுவனரீதியான தொடர்புகள் ஏதும் 19.07.2020 முதல் கிடையாது என்பதைனை இத்தால் அறியத்தருகிறோம்.

– ஆலய நிருவாக சபை

17.07.2020 – வருடாந்த உற்சவம் – 2020

அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 24.07.2020 அன்று ஆரம்பமாகி 03.08.2020 அன்று கும்பம் சொரியும் ஆராதனைகளுடன் நிறைவுபெறவுள்ளது.

கன்னிக்கால் வெட்டும் சடங்குகள் – 30.07.2020

தீச்சடங்கு – 01.08.2020 (தீமிதிப்பு – 02.08.2020 அதிகாலை 04:00)

பள்ளயச் சடங்கு – 02.08.2020

இம்முறை உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் COVID-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார பிரிவினரின் நெறிமுறைகளுக்கு அமைய வீதியுலாக்கள், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆடம்பரங்கள் ஏதுமின்றி மிக எளிமையாக அம்பாளிற்கான அபிடேக ஆராதனைகள் மாத்திரம் மேற்கொள்ள நிருவாக சபை தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளது.
சுகாதார பிரிவினரின் கண்டிப்பான நெறிமுறைகளை பின்பற்றி 100 பேரிற்கு மேற்படாத எண்ணிக்கையில் மாத்திரமும், சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபடுமாறும்;, சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

– ஆலய நிருவாக சபை

2020.06.20 – வருஷாபிஷேக அஷ்டோத்திர சஹஸ்ர சங்காபிஷேகம் – 2020

அம்பாள் ஆலயத்தில் இடம்பெறும் வருஷாபிஷேக அஷ்டோத்திர சஹஸ்ர சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும் நிகழும் சர்வாரி வருடம் ஆனித்திங்கள் 10ம் நாள் புதன்கிழமை (ஆங்கிலத் திகதி – 24.06.2020) திருதியை திதியும் பூச நட்சத்திரமும்  சித்தயோகமும் கூடிய சுப நாளில் காலை 07:00 மணிமுதல் புண்ணியாகவாசனம், யாக பூஜை, சங்கு பூஜை, விசேட திரவிய ஹோமம், பாலாபிஷேகம், திரவியாபிஷேகம், சங்காபிஷேகம், விசேட பூஜைகள், தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், ஆசியுரை என்பன அம்பிகையின் அருளால் இடம்பெறவுள்ளன.

முதல்நாள் 23.06.2020 மாலை 06:00 மணியளவில் விநாயர் வழிபாடு, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, சங்குஸ்தாபனம் முதலியன இடம்பெறவுள்ளன.

இம்முறை உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் COVID-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார பிரிவினரின் நெறிமுறைகளுக்கு அமைய பாற்குடபவனி, அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆடம்பரங்கள் ஏதுமின்றி மிக எளிமையாக அம்பாளிற்கான அபிடேக ஆராதனைகள் மாத்திரம் மேற்கொள்ள நிருவாக சபை தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளது.

சுகாதார பிரிவினரின் கண்டிப்பான நெறிமுறைகளை பின்பற்றி 50 பேரிற்கு மேற்படாத எண்ணிக்கையில் மாத்திரம் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.