ஆலய அபிவிருத்தி திருப்பணிகள்​
Temple Development Projects​

ஆலயம் தோற்றம் பெற்ற காலம் முதல் படிப்படியான அபிவிருத்தி திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. ஆலயத்தின் அறங்காவலர்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்திப் பணிகள் அருங்கொடையாளர்களாலும் ஆலய வளர்ச்சியன்பால் கொண்ட அதீத அக்கறையாலும் பலதரப்பட்ட அன்பர்களின் பொருளுதவி, நிதியுதவி, மற்றும் சரீர உதவிகளினால் ஆலயத்தின் உட்கட்டுமானம் படிப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்திப் பணிகள் - Current Development Projects

அம்பாள் ஆலயத்தின் 5ம் மண்டபத்தின் (தம்ப மண்டபம்) புனர் நிர்மான திருப்பணிகள் கடந்த 27.10.2019 அன்று (தீபாவளி தினத்தன்று) ஆரம்பமாகி தொடரச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வில்மண்டபம், சாளாகாரம், அலங்கார தூண்கள் பலவகைப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் என்பனவற்றுடன் கூடிய இந்த மண்டபம் பல அருங்கொடையாளர்களின் நிதியுதவிகளுடனும் பொருளுதவிகளுடனும் சரீர உதவிகளுடனும் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2022ம் ஆண்டு ஆனிமாதத்து பூச நட்சத்திரமன்று நடாத்த திட்டமிடப்பட்டிருக்கும் கும்பாபிடேகத்தை முன்னிறுத்தி ஆலயத்தில் இந்த அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து வர்ணப்பூச்சுக்கள் மேற்கொள்ளவும் அதன்பின்னர் கும்பாபிடேகம் செய்வதும் ஆலய நிருவாக சபையின் திட்டமாகும்.

அம்பாளின் திருத்தலத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்ய அன்னையடிவர்களின் பேருதவியும் பெருங்கொடையும் அவசியமாகையால் தங்களால் இயன்ற எத்தகைய உதவிகளையும் வழங்கி இத்திருப்பணிகள் பூர்த்தியுற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.