ஆலய பரிபாலன சபை
Temple Committee

ஆலய பரிபாலனமானது பெரிய ஊறணி வாழ் இந்துப் பொதுமக்களினால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை பொதுச் சபை என அழைக்கப்படும். இந்தப் பொதுச் சபையானது வருடம்தோறும் கூடி புதிய நிருவாக சபையினை தெரிவு செய்யவோ அல்லது நடப்பு நிருவாக சபையில் மாற்றம் செய்யவோ அங்கீகாரம் அளிக்கிறது. ஆலய பரிபாலன சபையின் செயற்பாடுகளை அல்லது அதன் கடமைகளையும் பொறுப்புக்களையும் விதந்துரைக்க யாப்பு எனும் மூல நிருவாக ஆவணம் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆலய பரிபாலன சபையானது அரசின் இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சகத்தின் கீழ் ஒரு சமயம் சார் சமூக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. யாப்பு உப விதிகளின் படி பரிபாலன சபையின் பணிக்காலம் ஒரு வருடமாகும். எனினும் பொதுச் சபையின் தீர்மானத்திற்கிணங்க ஆலயத்தில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளை பொறுத்து பரிபாலன சபையின் பணிக்காலம் இரண்டிலிருந்து மூன்று வருடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானமும் பிரதி வருடந்தோறும் இடம்பெறும் மகா சபைக்கூட்டத்தில் மாத்திரமே பரிசீலிக்கப்பட்டு தேவையேற்படின் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பரிபாலன சபையானது தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், போசகர் தவிர்ந்த ஏனை ஒன்பது நிருவாக உறுப்பினர்களைக் கொண்டது. மேலும் நிருவாக உறுப்பினர் சாராத கணக்காய்வாளர் ஒருவரும் பொதுச் சபையால் நியமிக்கப்படும். ஆலயத்தை நிர்வகிக்கின்ற முழுப் பொறுப்பும் பரிபாலன சபையினையே சாரும்.

ஆலயத்தின் யாப்பு – மூல ஆவணம் (PDF Document)